ரணிலின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் - கைது செய்யப்பட்ட 4 பேரும் விளக்கமறியலில்
CID - Sri Lanka Police
Ranil Wickremesinghe
SL Protest
By Vanan
ரணிலின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம்
அதிபர் ரணில் விக்ரமசிங்க வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பெரேரா என்பவர் வெளிநாட்டுக்கு ஓட்டம்
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த அவசியமான இவான் பெரேரா என்பவர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் அறியப்படுத்தியது.
அவர்கள் தொடர்பில் விமான நிலைய அதிகாரிகளை தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்