சுதந்திர தினத்திலும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுதலை இல்லை?
srilanka
Independence Day
pardon
ranjan-ramanayake
By Sumithiran
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் நாளையதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படவில்லை என சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுவார் என வதந்திகள் பரவியிருந்த போதிலும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அரச தலைவரின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
