மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க
hospital
prison
ranjan ramanayake
By Sumithiran
முழங்கால் வலியால் அவதிப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க, சிகிச்சைகளின் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, ரஞ்ஜன் ராமநாயக்க, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

