ரஞ்சனின் விடுதலைக்காக ஜெனிவா செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
srilanka
prison
ranjan
jeneva
By S P Thas
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நீதி வேண்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோர் ஜெனிவா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்த விடயம் பற்றி முறைப்பாடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கு சர்வதேச ரீதியில் அழுத்தங்களை பிரயோகிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஜெனிவா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
