10 வயது சிறுமி வன்புணர்வு : குடும்பஸ்தருக்கு நீதிமன்றம் வழங்கிய கடூழிய தீர்ப்பு
Sri Lanka Magistrate Court
Prison
By Sumithiran
10 வயதான சகோதரனின் மகளை வன்புணர்ந்த நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து 37 வயதுடைய குற்றவாளிக்கு 50 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி தர்ஷிகா விமலசிறி இன்றைய தினம் இந்த சிறைத்தண்டனையை விதித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அதனை செலுத்த தவறினால் குற்றவாளிக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
பல தடவைகள் வன்புணர்விற்கு
2018ஆம் ஆண்டு கண்டி - மஹாமுல்கம பகுதியில், 10 வயதுடைய சிறுமியை குற்றவாளி பல தடவைகள் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், குறித்த சந்தேகநபருக்கு எதிராக 3 வழக்குகளின் கீழ் சட்டமா அதிபரால் 2018ஆம் ஆண்டில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி