இலங்கையில் விளைந்த அபூர்வ மரவள்ளிக்கிழங்கு: காணக் குவியும் மக்கள்
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Thulsi
பிலிமதலாவ (Pilimathalawa) - மல்கம்மன பகுதியில் 44 கிலோ எடையுள்ள அபூர்வ மரவள்ளிக்கிழங்கு ஒன்று உற்பத்தியாகி உள்ளது
63 வயதான ஓய்வூதியரான சுபசிறி விஜேசுந்தர என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இந்த மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யப்பட்டுள்ளது.
பார்வையிட அதிகளவு மக்கள்
அவர் தனது அன்றாட வாழ்க்கைக்காக தோட்டத்தொழில் செய்து வருகின்றார். தனது தோட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மரவள்ளி பயிரிட்ட நிலையில் நேற்று முன்தினம் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்துள்ளார்.
அங்கு, ஒரு பெரிய மரவள்ளிக்கிழங்கு இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்ததுடன், அதை எடை போட்ட போது, 44 கிலோ கிராம் இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த அபூர்வ கிழங்கை பார்வையிடுவதற்காக பிரதேச மக்கள் அதிகளவில் வருகைத்தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்