“உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்” இரத்தினபுரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
இரத்தினபுரி பிரதேசத்தில் போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் இருந்த எட்டு முச்சக்கர வண்டிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதேவேளை, தமது முச்சக்கரவண்டி திருப்பட்டிருக்குமாயின் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்துடன தொடர்பு கொண்டு இதுதொடர்பான விபரங்களை அறிந்துகொள்ளுமாறு பொலிசார் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர
இதேவேளை, இரத்தினபுரியில் களவாடப்பட்ட 13 முச்சக்கரவண்டிகளை போலி ஆவணங்கள் மற்றும் இலக்க தகடுகளை பயன்படுத்தி விற்பனை செய்யத மற்றுமொரு நபர் தப்பிச்சென்றுள்ளார்
குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிசார் சென்ற போது அவர் தப்பிச்சென்றுள்ளார்.
இரத்தினபுரி பிரதேசத்தில் இடம் பெற்று வந்த முச்சக்கரவண்டி கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேற்படி சந்தேக நபர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்தேகநபர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய பொலிசார் இரத்தினபுரி மிஹிதுகம என்ற இடத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 12 முச்சக்கர வண்டிகள் சிறிய உழவு இயந்திரம் 2 கெப் வாகனங்கள் லொரி மற்றும் 5 மோட்டார் சைக்கில் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திருடப்பட்ட முச்சக்கர வண்டிகளின் நிறம் எஞ்சின் இலக்கம் பதிவு இலக்கம் என்பனவற்றை மாற்றி இவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரிய வந்திருக்கிறது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)