வெலிக்கடைச் சிறைக்கு மாற்றப்பட்ட ரவி உள்ளிட்ட எண்மர்! வெளிவந்த காரணம்
srilanka
arrest
ravi karunanayake
By Vasanth
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் வெலிக்கடை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என வெலிக்கடை சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, கசுன் பலிசேன உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்றின் விஷேட நிரந்தர நீதாயம் உத்தரவிட்டது.
2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.