கனடா வெளியேற்றியது ரோவின் மூத்த அதிகாரியையே..! வெளியான அதிர்ச்சி தகவல்
கனடாவில் இருந்து வெளியேற்றபட்ட இந்திய தூதரக அதிகாரி ரோவின் வெளிப் புலனாய்வு அமைப்பின் மூத்த அதிகாரி என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் படைப்பிரிவின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலையான விடயம் தொடர்பில் இந்திய தூதரக அதிகாரி ஒருவரை கனடா அரசு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கான கனடா தூதரக அதிகாரியை 5 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதேவேளை, கனடா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இராஜதந்திர முறுகல் நிலை என்பது உச்சக்கட்டத்தை அடைந்து வரும் நிலையில், அதன் விளைவுகள், அடுத்தக்கட்ட நகர்வுகள் என்பன குறித்து அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் எம்மோடு பகிர்ந்து கொண்டார்.
அவர் மேலும் குறிப்பிட்ட விடயங்கள் காணொளியில்