மைத்திரியின் இதயம் எங்கே உள்ளது? மகன் வெளியிட்ட தகவல்
Maithripala Sirisena
Polonnaruwa
Heart
Daham Sirisena
By Sumithiran
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்(Maithripala Sirisena) மகன் தஹாம் சிறிசேன(Daham Sirisena), பொலனறுவை தனது தந்தையின் இதயம் என்றும், தனது சொந்த பூமி பொலனறுவை எனவும் எந்த சவாலையும் ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பொலனறுவை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவராக அரசியலில் பிரவேசித்ததன் பின்னர் தனது முதலாவது உரையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் இளைஞர்கள் தற்போது வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும், நாட்டுக்கு நீண்டகால வேலைத்திட்டம் தேவை எனவும் அவர் தெரிவித்தார்.

