நிதி அமைச்சை ஏற்க தயார் ஆனால்...! ஹர்ஷ டி சில்வா வெளியிட்ட தகவல்
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமாயின் நிதி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
"நான் நிதியமைச்சு பதவியை ஏற்றுக்கொண்டாலும் நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. நாட்டின் பிரச்சனை தீர வேண்டுமானால் அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
நான் நிதியமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் அது எனக்கு தனிப்பட்ட வெற்றியாக இருக்கும். ஆனால், அது நாட்டுக்குக் கிடைத்த வெற்றி அல்ல.
நாட்டுக்காக என்னை அர்ப்பணிக்க 100 சதவீதம் தயாராக இருக்கிறேன், நான் நிதியமைச்சகத்தை ஏற்க வேண்டுமாயின் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும்.
அரசாங்கத்தில் சுயாதீனமாக செயற்படுபவர்களுடன் இணைவதை தேசிய அரசாங்கம் என்று சொல்ல முடியாது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா
