22ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க தயார்! மைத்திரி
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Kiruththikan
22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக நாட்டின் இறையாண்மை பலப்படுமாக இருந்தால், அதற்கு ஆதரவளிக்க தயார் என முன்னாள் அதிபரும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை.
எனினும், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இச்சட்டமூலத்தின் மூலம் எதிர்காலத்தில் அதிகளவான திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம்.
22ஆவது திருத்தச் சட்டமூலம்
22ஆவது திருத்தச் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் ஜனநாயகம், மக்கள் இறையாண்மை ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.
19ஆவது திருத்தச் சட்டம் எனது ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது.
எனினும், 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு நான் ஆதரவாக வாக்களிக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்