ரஷ்ய இராணுவத்துக்கு எதிராக துப்பாக்கி ஏந்த தயாராகும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்
ரஷ்ய இராணுவத்தை எதிர்க்க, தேவைப்பட்டால் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்த தயாராக இருப்பதாக உக்ரைன் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் இன்னா சோவ்சுன் தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், துப்பாக்கியை தாம் வெறுப்பதாகவும், ஆனால் எந்த ஒரு ரஷ்ய வீரரும் தமது நாட்டிற்குள்ளும், வீட்டிற்குள்ளும் நுழைய அனுமதிக்க மாட்டேன் எனவும் கூறினார்.
தேவை ஏற்பட்டால் துப்பாக்கியை எடுப்பேன் என்றும், இதற்காக தமது சகோதர் மற்றும் நண்பர்கள் மூலம் பயிற்சி எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்காக போரிட தயார், அதையும் சிறப்பாக செய்வேன் என்றும் இன்னா சோவ்சுன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் உக்ரைனிய நாடாளுமன்ற எம்.பி.க்கள், கிரா ருடிக் மற்றும் லெசியா வாசிலென்கோ ஆகியோர் தேசத்தை பாதுகாக்க நாடு முழுவதும் உள்ள பெண்கள், அரசியல்வாதிகள் தேவைப்படும் நேரத்தில் ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் என தெரிவித்துள்ளனர்.
