இலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட இருபெரும் சக்திகள்! கூட்டமைப்பின் ரணில் எதிர்ப்பு காரணம் என்ன..!
இலங்கையின் தற்கால அரசியல் நெருக்கடி, ஒரு அரசியல் மாற்றத்தின் இடைக்கால ஏற்பாடாகவே அமைந்திருப்பதாக எழுத்தாளர், விமர்சகர் குணா கவியழகன் கூறுகிறார்.
பொருளாதார ரீதியான ஒரு இடைக்கால ஏற்பாடு அல்ல இது. இலங்கையின் அரசியலில் ஒரு மாற்றத்தை நிகழ்த்துவதற்காக, குறிப்பாக ராஜபக்சர்களுடைய, அவர்களது கட்சியின் எதிர்கால நகர்வை முறிப்பதற்கான அரசியல் களமாக இருக்கிறது.
எதிர்கால மாற்றத்தை நிகழ்த்துவதற்கான ஒரு இடைக்கால முறிவு

எதிர்கால மாற்றத்தை நிகழ்த்துவதற்கான ஒரு இடைக்கால முறிவாகத் தான் இதனைப் பார்க்க வேண்டி இருக்கிறது.
ராஜபக்ச வம்சத்தை இப்படியாக விட்டால் எதிர்கால அரசியலில் அவர்களை முறிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுவிடும். இவ்வாறு ஒரு கணிப்பு இருந்தபடியினால், இதனை உடைக்க வேண்டிய ஒரு கடப்பாடு உள்நாட்டு அளவிலும் சர்வதேச அளவிலும் வந்திருக்கிறது.
இந்த இரு புலங்களும் ஒன்றாகிய படியினால் இந்த ஆட்சியை முறித்து ஒரு புதிய இடைக்கால ஏற்பாடு செய்யவேண்டி இருந்தது.
அடுத்து தேர்தலை நோக்கியதாக இருக்கும்

இந்தப் புதிய இடைக்கால ஏற்பாடு எதனை நோக்கிச் செல்லமாக இருக்கும் என்றால் அடுத்த தேர்தலை நோக்கியதாக இருக்கும். ஒரு நிரந்தர மாற்றத்தை கொண்டு வருவதற்கான ஒரு பாதையாக இருக்கும்.
உள்நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் இணைந்து இனிவரும் இரண்டு வருட காலங்களை பயன்படுத்த இருக்கிறார்கள். இதுதான் இனிவரும் காலங்களில் நடக்கலாம் என குணா கவியழகன் கூறுகிறார்.
மேலும் அவர் தெரிவிக்கும் விடயங்களை எமது அக்கினிப் பார்வை நிகழ்ச்சியில் காணலாம்,