பங்காளி கட்சிகளின் அதிரடி முடிவால் அரசாங்கத்திற்கு தொடரும் நெருக்கடி
அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் அரச பங்காளி கட்சிகளின் 16 பேர் சுயேச்சைக் குழுவாக நாளை (05) நாடாளுமன்றத்தில் தனித்தனியாக அமர்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் அரசாங்கத்தில் இருந்து விலகி தனியே அமரவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் அவர்கள் இன்னும் ஆளும் கட்சியிலேயே உள்ளனர். விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து சுயேச்சையாக செயற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாளை (06) நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்க அமைச்சுப் பதவிகளைப் பெறாத பல சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
