இலங்கை கடற்பரப்பில் பயணிக்கும் வெளிநாட்டு கப்பல்கள் தொடர்பில் விஜயதாச ராஜபக்ச வெளியிட்டுள்ள தகவல்
இலங்கை கடற்பரப்பில் பயணிக்கும் வெளிநாட்டு கப்பல்களிடம் இருந்து டொலர் கட்டணத்தை பெறும் உரிமை இதுவரை பயன்படுத்தப்படவில்லை என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையில் தேசிய நீர் விஞ்ஞான சட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலிக்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் வெளிநாட்டுக் கப்பல்களிடம் இருந்து டொலர் கட்டணத்தை பெற்றுக்கொள்ளும் உரிமைக்கு தேவையான சட்ட அதிகாரம் இலங்கைக்கு கிடைக்கும் என நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
வரைபடங்கள்
தேசிய நீரியல் அலுவலகம் அமைப்பதன் மூலம், நீரியல் ஆய்வாளர்கள் மற்றும் கடல் வரைபட வல்லுனர்களின் பதிவு மற்றும் அது தொடர்பான விடயங்கள் மேற்கொள்ளப்படும் என இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இங்கிலாந்து ராயல் நேவி கப்பல் போக்குவரத்திற்காக தென் கடல்களை உள்ளடக்கிய 3 வரைபடங்களை உருவாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வரைபடங்களை உருவாக்குவதற்கு இலங்கையில் இருந்து தரவுகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், தரவுகளைப் பெற்றதன் பின்னர் சம்பந்தப்பட்ட கடற்பரப்புகளுக்கான வரைபடங்களை உருவாக்குவதற்கு இலங்கைக்கு உரிமை உள்ளதாக கடற்படை அதிகாரிகளால் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், தொடர்புடைய வரைபடங்களும் புதுப்பிக்கப்பட்டு டொலர்களை உருவாக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹமாஸ் அமைப்பிற்கு பேரிழப்பு : துணைத்தலைவர் உட்பட முக்கிய தளபதிகள் ஆளில்லா விமான தாக்குதலில் பலி (காணொளி)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |