கனடாவின் அங்கீகாரம்- உலக தமிழ் சமுகத்தின் வரலாற்றில் முக்கிய நாள் -ஹரி ஆனந்த சங்கரி
இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையை கனடா நாடாளுமன்றம் ஏற்று, அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றிய நாள் தமிழ் சமூகத்தின் வரலாற்றில் மிக முக்கிய நாட்களில் ஒன்று என கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை தீர்மானத்தை கனடா நாடாளுமன்றம் நேற்று ஏகமனதாக ஏற்று அங்கீகரித்தது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே-18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக கனடா நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில் பிரேரணை நிறைவேற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஹரி ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கனடாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகத்தின் வரலாற்றில் இது மிகவும் முக்கிய நாள் என்று அவர் கூறினார்.
கனடா நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தமிழ் மக்களின் இனப்படுகொலையை அங்கீகரிப்பதுடன், மே-18 ஐதமிழ் இனப்படுகொலை நினைவு தினமாகவும் அங்கீகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
உலகில் நாடாளுமன்றம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றது தமிழ் இனப்படுகொலை என ஏற்று அங்கீகரிப்பது இதுவே முதல் சந்தர்ப்பம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இத்துடன், நாங்கள் நின்றுவிடக் கூடாது. உண்மையில், பொறுப்புக்கூறலை நோக்கிய பயணம் மிக நீண்டது. இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியதை உறுதி செய்ய நாங்கள் இன்று இரட்டிப்பு வேகத்தில் உழைக்க வேண்டும் என்றும் ஹரி ஆனந்தசங்கரி கூறினார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
