மீண்டும் முகக்கவசம் அணிவதற்கு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்!
Ministry of Health Sri Lanka
Face Mask
Sri Lankan Peoples
By Pakirathan
மீண்டும் முகக்கவசம் அணிவதற்கு மக்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதன் காரணமாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் இருந்து கொழும்பில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 152 ஆக பதிவாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தர கண்காணிப்பு (AQM) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நுவரெலியா, நீர்கொழும்பு, தம்புள்ளை, அம்பலாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் கம்பஹா பகுதிகளில் காற்றின் தரம் நல்ல நிலையில் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
முகக்கவசம்
காற்றின் மாசு சுட்டெண் 100 க்கு அதிகமாக இருந்தால் சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் சுவாசக்கோளாறு ஏற்படும் என்பதால் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்