சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஏற்படவிருக்கும் மாற்றம்
சிறிலங்கா நாடாளுமன்ற( Parliament of Sri lanka) கட்டிடத்தின் புனரமைப்பு பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
40 வருடங்கள் பழமையான இந்த நாடாளுமன்ற கட்டிடத்தில் சில புனரமைப்புகள் தேவைப்படுவதாகவும், அந்த புனரமைப்புகளை கண்டறிந்து அதற்கான பணிகளை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
உடன்பாடு
அதன்படி, கடந்த 25 ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் நடந்த ஆலோசனைக் குழு கூட்டத்தில், மேற்கொள்ள வேண்டிய பணிகள் கண்டறியப்பட்டு, நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் மற்றும் மத்திய பொறியியல் ஆலோசனைக் குழுவின் தலையீட்டில் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்குத் தேவையான ஏற்பாடுகளை ஒதுக்குவதற்கு கொள்கை உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |