உலக சாதனையாக மாறலாம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் - அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் இலங்கையில் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மார்ச் மாதம் தேர்தல் நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான வேட்பு மனுக்கள் இந்த மாதம் 18 ம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்தநிலையில், இலங்கையில் தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அது உலக சாதனையாக மாறலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் நெருக்கடி போன்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கத்தின் செலவுகளை மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், மேலதிகமாக பணம் அச்சிடப்பட வேண்டும் என்பதோடு, அதையும் தண்டி தேர்தலை நடத்துவது உலக சாதனையாக அமையும் என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் கூறியுள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
