யாழ்ப்பாணம் மாதகலில் 60 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா மீட்பு...!
Sri Lanka Police
Sri Lanka
By Kiruththikan
கஞ்சா
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 60 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று(23) அதிகாலை 2 மணியளவில் மாதகல் கடற்கரையோரமாக குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கேரள கஞ்சாவை கடத்த பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் படகொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கேரள கஞ்சா மற்றும் படகு
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகு என்பன இளவாலை காவல்துறையினரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினரும் இராணுவ புலனாய்வுப்பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி