ஆயுதங்களுடன் இருவர் கைது! (படங்கள்)
ஆயுதத்தளபாடங்களுடன் பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர காவல்துறை பிரிவுற்குட்பபட்ட அக்பர்புர, பங்குறாண எனுமிடத்தில் 32, 47 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகலவலின் அடிப்படையில் லங்காபுர காவல்துறையினருடன் இணைந்து இரு வீடுகளில் சுற்றி வளைப்புத்தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதே வெள்ளிக்கிழமை குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணை

சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், லங்காபுர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களிடமிருந்து பின்வரும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
303 தாக்குதல் துப்பாக்கி-01
303 மெகசீன்-01
7.62X51 ரவைகள்-11
7.62 X 39 - ரவைகள்-05
வாள்கள் - 02
இரும்புச்சன்னங்கள் -190
மோட்டார் சைக்கிள் செயின் - 02
சொட்கன் துவக்கு-01, அதன் தோட்டாக்கள்-05