இலங்கையின் நிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

UNHCR Sajith Premadasa Child Abuse
By Vanan Nov 08, 2022 06:49 AM GMT
Report

இலங்கையின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழு (UNCRC) சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சி கொண்டு வந்த, சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இந்நாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்பதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

சிறுவர் துஷ்பிரயோகம்

இலங்கையின் நிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை | Red Alert Regard Child Protection Srilanka Uncrc

இதன் காரணமாக சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட அனைத்து துஷ்பிரயோகங்களில் இருந்தும் இந்நாட்டு சிறுவர்களை பாதுகாத்து அவர்களுக்கு பாதுகாப்பான நாளைய எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது.

இதன் பிரகாரம், இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி, பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடமிருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

01. கடந்த 10 ஆண்டுகளில்,18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம்,பாலியல் பலாத்காரம்,கொடுமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு எத்தனை முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த முறைப்பாடுகள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை எவ்வாறு செயற்பட்டது என்பது குறித்தும்,குறிப்பாக பெறப்பட்ட தண்டனைத் தீர்ப்புகள் தொடர்பான தகவல்கள் தொடர்பான விரிவான அறிக்கையை இந்த கௌரவ சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா? சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம்/செயல்முறையில் அரசாங்கம் திருப்தியடைகிறதா?

02. சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கும்,அத்தகைய துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் ஒரு தேசியக் கொள்கையை உருவாக்கும் நோக்கத்திற்காக 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டம் மூலம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அந்தச் சட்ட அடிப்படையில் தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கை நிறுவப்பட்டுள்ளதா?அவ்வாறில்லை என்றால்,தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கையை ஏன் விரைவில் அமுல்படுத்தக் கூடாது?

03. சிறுவர்கள் மற்றும் நியாய சீர்திருத்த சட்ட மூலத்தை (Child & Justice Reform bill) நாடாளுமன்றத்தில் சமர்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் தற்போதைய முன்னேற்றம் யாது? அதனை எப்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவென எதிர்பார்க்கப்படுகிறது?

04. 2021 பெப்ரவரியில்,சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனையை நிறுத்துவதற்கான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது (SC Case No: SC/FR/97/2017). இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை சிறார் நியாய நடைமுறையில் உள்ளடக்குவதற்கு அரசாங்கம் போதுமான அளவு ஈடுபாட்டை காண்பித்துள்ளதா? மேலும், சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழு (UNCRC) பரிந்துரைத்தபடி, தண்டனைச் சட்டத்தின் 82, 341(i) மற்றும் 308(A) ஆகிய பிரிவுகளில் திருத்தம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?

இது உண்மையா

இலங்கையின் நிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை | Red Alert Regard Child Protection Srilanka Uncrc

05. பாதிக்கப்பட்ட பல சிறுவர்களின் மனித உரிமைகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் மீண்டும் அதே பணியகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது உண்மையா? அப்படியானால், இந்நியமனம் எந்த அடிப்படையில் நியாயமானது?

06. சர்வதேச பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறும் பட்சத்தில் அரசிடமிருந்தோ அல்லது கல்வி அமைச்சிலிருந்தோ எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படுவதாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இது உண்மையா? இந்தப் பாடசாலைகளிலும் எமது நாட்டுப் பிள்ளைகளே கல்வி கற்கும் நிலையில், கல்வி அமைச்சின் முறையான ஒழுங்குமுறைக்கு இப்பாடசாலைகள் ஏன் உட்படுத்தப்படவில்லை? - என்றார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024