95 குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு! காவல்துறை வெளியிட்ட தகவல்
வெளிநாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள 95 பாதளா உலக குற்றவாளிகளுக்கு எதிராக இலங்கை காவல்துறையினர் சிவப்பு அறிவிப்புகளைப் பெற்றுள்ளனர்.
இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய காவல்துறை ஊடகப் பேச்சாளர் வுட்லர், சிவப்பு அறிவிப்புகள் மூலம், 2024 ஆம் ஆண்டில் 10 சந்தேக நபர்களும், 2025 ஆம் ஆண்டில் 11 சந்தேக நபர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நாடுகடத்தல்
அதே காலகட்டத்தில், நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் 21 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, வெளிநாடுகளில் ஒளிந்து கொண்டிருக்கும் மற்றும் நிகழ்நிலை குற்றங்களில் ஈடுபட்டுள்ள பல குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், இதன் விளைவாக இன்று வரை 95 சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்புகளின் விளைவாக, இரண்டு ஆண் சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் இன்று இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |