செங்கடலில் ஆட்டங்காட்டும் ஹவுதி! பிரித்தானியாவிற்கு பேரிழப்பு
United Kingdom
England
Israel-Hamas War
By pavan
செங்கடலில் ஹவுதி அமைப்பினரின் தாக்குதலுக்குள்ளான ரூபிமர் என்ற சரக்கு கப்பல் நேற்றையதினம் கடலில் மூழ்கியதாக ஏமன் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 18-ந் திகதி ஏடன் வளைகுடா அருகே சென்று கொண்டிருந்த Rubymar என்ற பிரித்தானிய சரக்கு கப்பல் ஹவுதி அமைப்பின் தாக்குதலுக்குள்ளானது.
கடலில் மூழ்கிய கப்பல்
ஐக்கிய அரபு அமீரகத்தின் Khor Fakkan பகுதியில் இருந்து பல்கேரியாவின் வர்ணா பகுதிக்கு புறப்பட்டு சென்ற போதே குறித்த சரக்கு கப்பலானது தாக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தாக்குதலின் போது கப்பலில் இருந்த ஊழியர்களை பிரித்தானிய இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
எனினும் கப்பல் பலத்த சேதம் அடைந்ததையடுத்து மாலுமிகள் அனைவரும் மீட்கப்பட்ட நிலையில் கப்பல் அதே பகுதியில் தத்தளித்துக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் அந்த கப்பல் நேற்று கடலில் மூழ்கியதாக ஏமன் அரசு தெரிவித்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்