குறைக்கப்படும் மற்றுமொரு பொருளின் விலை!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Government Of Sri Lanka
Cement Price in Sri Lanka
Economy of Sri Lanka
By Pakirathan
நாட்டில நிலவும் விலை அதிகரிப்புக்கு மத்தியிலும் சில பொருட்களின் விலைகள் குறைய ஆரம்பித்துள்ளன.
அந்தவகையில், இன்று நள்ளிரவு முதல் சீமெந்தின் விலை குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 கிலோ கிராம் சீமெந்து மூடையின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை
இன்று நள்ளிரவு முதல் 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலையை 225 ரூபாவினால் குறைக்க பல சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
அந்தவகையில், குறித்த விலை குறைப்பின் மூலம் 50 கிலோகிராம் சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை 2750 காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இதற்கு முன்னர் குறித்த சீமெந்து மூடை ஒன்றின் விலை ரூ.2,975 ஆக காணப்பட்டது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்