விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் - நாளை முதல் விலை குறைக்கப்படவுள்ள முக்கிய உரவகை
Sri Lanka
By pavan
விவசாயிகளுக்கான மகிழ்ச்சி அறிவிப்பொன்றை விவசாய அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 50 கிலோகிராம் எடையுள்ள MOP அல்லது பூந்தி உரம் நாளை முதல் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாளை முதல் நடைமுறை

தற்போது 15,000 ரூபாய்க்கு விற்கப்படும் MOP உரம் ஒரு மூட்டை நாளை முதல் 14,000 ரூபாய்க்கு வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரத்தின் விலையானது ஏற்கனவே 19,500 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி