வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு : வெளியான தகவல்
தற்போதைய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைத்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன மேலும் தெரிவிக்கையில், “பண்டிகைக் காலங்களில் கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் விலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.
பொருட்களின் விலை
கடந்த வருடத்தை விட இவ்வருடம் கேக் விலையில் சிறிதளவு குறைந்துள்ளது.
பொதுவாக பட்டர் கேக் ரூபாய் 900 – ரூபாய் 1200 இடையே விற்கப்படுகின்றது.
தற்போதைய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைத்திருக்கலாம்.
ஆனால், அவ்வாறான சந்தர்ப்பம் எங்களுக்கு வழங்கப்படவில்லை.
கோதுமை மா மற்றும் மாஜரின் விலைகளை அரசு தலையிட்டிருந்தால் குறைத்திருக்கலாம், மக்கள் அவதானமாக இருங்கள்.
குறைந்த விலையில் தெரிவு செய்வது மக்கள் கைகளில் தான் இருக்கின்றது அத்தோடு சிலர் விலைகளை அதிகரித்தும் சொல்லலாம், மக்கள் சிந்தித்து செயல்படுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |