'அவந்திகை அகம்' றீ(ச்)ஷாவில் கிளிகளுடன் புகைப்படம்
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் அடுத்த முயற்சியாக 'அவந்திகை அகம்' என்ற கிளிகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
கிளிகளுடன் புகைப்படங்கள் எடுப்பதற்காக வட மாகாணத்திலிருந்து மக்கள் ஹம்பாந்தோட்டையை நோக்கி படையெடுத்து செல்வார்கள்.
ஆனால் றீ(ச்)ஷாவில் அமைந்துள்ள “அவந்திகை அகம்” இவர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது.
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திபெற்ற பசுமை பண்ணையாக றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ( ReeCha Organic Farm) காணப்படுகின்றது.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமான பல வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு விடுதிகள், விளையாட்டு திடல்கள் மற்றும் கண்கவர் இடங்கள் அமைந்துள்ளதோடு தமிழர்களின் பண்பாடும் பாரம்பரியங்களும் மாறாத வகையில் பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன.
அந்தவகையில் றீ(ச்)ஷாவில் பல புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது அவந்திகை அகம் என்ற பெயரில் பல வகை கிளிகளுடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்வதற்கான ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் காணொளியில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 18 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்