யாழில் நாளை முதல் சீரான எரிபொருள் விநியோகம் :அரச அதிபர் துரித நடவடிக்கை
யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகத்தினை மேற்கொள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி. எஸ். ராஜகருணாவுடன் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், தொலைபேசி ஊடாக இன்றைய தினம் (03.03.2026) கலந்துரையாடினார்.
இதன்போது, யாழ்ப்பாணத்தில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து (36 Ceypetco ) எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் நாளை (04.03.2026) பெட்ரோல் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் இதன் மூலம் வரிசையினை கட்டுப்படுத்தலாம் எனவும் அரசாங்க அதிபர் யோசனை தெரிவித்திருந்தார்.
அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைய, கொலன்னாவையிலிருந்து நேரடியாக எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்ய தாம் நடவடிக்கை எடுப்பதாகவும், இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனத் தலைவரால் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் பெட்ரோல் விநியோகம்
இதன் பிரகாரம் நாளை மட்டும் 310,200 லீற்றர் பெட்ரோல் கொலன்னாவை மற்றும் காங்கேசன்துறை களஞ்சியங்களிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும் எனவும், இவ் விநியோகம் தொடர்பில் வட பிராந்திய பெட்ரோலியக் கூட்டுத்தாப பிராந்திய முகாமையாளர்சிவகரன் அவர்களுடன் அரசாங்க அதிபர் தொடர்பு கொண்டு, நாளைய விநியோக நடவடிக்கையினை ஒழுங்குபடுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

அதன் பிரகாரம் வட பிராந்திய முகாமையாரால் விநியோகப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவ் விடயம் தொடர்பில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் கவனத்திற்கும் அரசாங்க அதிபரால் கொண்டுவரப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |