வடக்கு - கிழக்கு தமிழர்களின் அரசியல் போர்க்காலமே தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி! மா.சத்திவேல்

Sri Lanka Politician Sri Lanka National People's Power - NPP
By Harrish Dec 04, 2024 06:49 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தியின்(NPP) ஆட்சியில் வடக்கு - கிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (04) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அரசியல் களச் சூழ்நிலை அறிந்து எமக்கிடையிலான பலமான அரசியல் கூட்டு கட்டமைப்பு உருவாக்கினால் மட்டுமே நாம் எதிர்நோக்கும் அரசியல் போரினை எதிர்கொள்ள முடியும். 

கல்வி அமைச்சின் முன்பான போராட்டத்தை அரசாங்கம் அடக்கவில்லை! ஹரிணி அமரசூரிய

கல்வி அமைச்சின் முன்பான போராட்டத்தை அரசாங்கம் அடக்கவில்லை! ஹரிணி அமரசூரிய

தமிழ் மக்களின் அரசியல் பிரேரணை

தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் பிரேரணைகளை மையப்படுத்தி பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான ஆயத்த பேச்சுவார்த்தையினை தமிழ் தேசிய முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் தமிழரசு கட்சி தலைவர் சிறீததரனுக்கும் இடையில் ஆரம்பித்திருக்கும் பேச்சு வார்த்தையை வரவேற்பதோடு, இக்கூட்டு செயற்பாடு நாடாளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் கொள்கை ரீதியில் பலமடைய வேண்டும். 

புலம்பெயர்ந்தோர் அமைப்புக்களும் தடம் மாறாது களத்திலும் புலத்திலும் அரசியல் கடப்பாட்டினை நிறைவேற்ற துணை நிற்க வேண்டும்.

வடக்கு - கிழக்கு தமிழர்களின் அரசியல் போர்க்காலமே தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி! மா.சத்திவேல் | Reign Of Npp War Period Against North East Tamils

அதனைத்தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையாக திரண்டது போன்று மீண்டும் மக்கள் அரசியலும் அதற்கான கூட்டு செயல்பாடும் கொள்கை ரீதியில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி பலமடைய அனைவரும் அரசியல் முதிர்ச்சியோடு தம் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்கின்றோம். 

தமிழர் தாயக விடுதலை போராட்டத்தை தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் பயணத்தை சிதைத்த சக்திகளுக்கு மத்தியில் நேற்று முளைத்த சில அரசியல் காளான்களுக்கும் எம் தாயக அரசிற்கான கூட்டு தடையாக இருக்கலாம்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் பாடமாக கொண்டு அரசியல் பயணத்தில் விரைவாக பலமடைய வேண்டும் என்பதே தமிழ் தேச மக்களின் அரசியல் விருப்பம்.

சிக்கப்போகும் அரசியல் தலைகள் : இன்று வெளியாகும் சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியல்

சிக்கப்போகும் அரசியல் தலைகள் : இன்று வெளியாகும் சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியல்

நாடாளுமன்றில் 3/2 பெரும்பான்மை

நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தையும் நாடாளுமன்றில் 3/2 அதிகமான பெரும்பான்மை கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அடுத்து வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும், மாகாண சபை தேர்தலிலும் முழு நாட்டையும் தமதாக்கிய பின்னர் யாப்பு சீர்திருத்தம் எனும் போர்வையில் தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரை தீவிரப்படுத்தும். 

சூடு கண்டவர்களாக நாம் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் கட்சிகளாகவும் சமூக அமைப்புகளாகவும் தனித்தனியாகவும் கூட்டாகவும் எம் தாயக அரசியலை மையப்படுத்தி கூட்டு செயற்பாட்டு சூழலை அவசரமாக தமிழர் தாயக பிரதேசங்களில் உயிர்ப்பித்தல் அவசியம்.

வடக்கு - கிழக்கு தமிழர்களின் அரசியல் போர்க்காலமே தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி! மா.சத்திவேல் | Reign Of Npp War Period Against North East Tamils

உயிர்ப்பிக்கப்படும் கூட்டு தமிழ் மக்கள் பேரவை முன் வைத்த அரசியல் முன்மொழிவுகளோடு ஆரம்பிக்கலாம்.

பல்வேறு விதமான கருத்து மோதல்கள், தலைமைத்துவம் தொடர்பான சிக்கல்கள்,அமைப்பு ரீதியில் நிர்வாக சிக்கல்களும் வரலாம். கொள்கை அரசியலில் விட்டுக்கொடுப்புகள் இன்றி பலமான தேச அரசியலை கருத்தினை முதன்மைபடுத்தி சகிப்புத்தன்மையுடன் பயணத்தை தொடருவது சாலச் சிறந்தது.

மக்கள் விடுதலை முன்னணி செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் அண்மைய ஊடக பேட்டியில் மக்கள் விடுதலை முன்னணியும் தேசிய மக்கள் சக்தியும் ஒன்று என்று கூறியதில் இருந்து மக்கள் முன்னணியில் அரசியல் முகம் வெளிப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாதவர்கள் தேசிய மக்கள் சக்தி என முகம் கொண்டு வெளியில் வந்துள்ளனர். 

திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைதீவு கடற்தொழிலாளர்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைதீவு கடற்தொழிலாளர்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தமிழர்களின் அரசியல் தீர்வு 

மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளருடைய கூற்றுக்கு தேசிய மக்கள் சக்தி இதுவரைக்கும் எந்த பதிலையும் அளிக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி என்பது மக்கள் விடுதலை முன்னணியே. 

எனவே தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அதன் கோரமுகம் அவ்வாறே உள்ளது என்பதிலே மாற்று கருத்து கிடையாது.

வடக்கு - கிழக்கு தமிழர்களின் அரசியல் போர்க்காலமே தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி! மா.சத்திவேல் | Reign Of Npp War Period Against North East Tamils

தமிழர் தேசத்தில் அரசு படைகளை பலப்படுத்தியதும், படைத்தளங்களை விரிவுபடுத்தியதும், அரச காணி மற்றும் பொதுமக்கள் காணிகளையும் கையகப்படுத்தியதும், மகாவலி அதிகாரி சபையை முன்னோக்கி நகர்த்துவதும் சிங்கள பௌத்த திணைக்களங்களை சுதந்திரமாக செயல்பட இடமளித்ததும் தெற்கின் சிங்கள பௌத்த பேரின வாத அரசியலின் தேவை கருதியே.

தற்போதும் அதே அரசியல் கருத்தியல் கொண்டவர்கள் பாதைகள் திறந்து விடுகின்றனர், படைத்தளங்களை கூடுகின்றனர்( படைகளை குறைக்கவில்லை) மாவீரர் தினத்தை நினைவு கூற அனுமதிக்கின்றனர் கைதும் செய்கின்றனர். 

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தேசிய வாதம்

இது போன்ற கவர்ச்சி செயல்கள் மேலும் தொடரலாம். இதுவும் அவர்களின் அரசியல் தேவை கருதியே அன்றி தமிழர்களின் தேவை கருதி அல்ல. இதனை தமிழ் தேச மக்களும் நன்கு உணர்வார்கள். இந்நிலையில் மாற்றம் அடையலாம். 

எதிர்த்தரப்பு கோஷங்களுக்கு மத்தியில் மேலும் இறுக்கமடையலாம். ஆட்சி அதிகாரமும் பெரும்பான்மையையும் அவர்களிடத்தில் இருக்கின்றது என்பதை நாம் மறக்கவில்லை.

வடக்கு - கிழக்கு தமிழர்களின் அரசியல் போர்க்காலமே தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி! மா.சத்திவேல் | Reign Of Npp War Period Against North East Tamils

தமிழர் எதிர்கால அரசியல் நலன் கருதி கடந்த கால அரசியல் குரோதங்கள், போட்டியை அரசியல், காட்டிக் கொடுப்புக்கள், சலுகை அரசியல் என்பவருக்கு இடம் கொடுக்காது பெரும் தேசிய வாதத்தினை தேசமாக மக்களோடு சேர்ந்து எதிர் கொள்ள கொடுக்கவும் பேச்சு வார்த்தை தொய்வும் தோல்வியையும் சந்திக்காது முன்னோக்கி நகர்ந்து செல்லும் பொறுப்பும் கடப்பாடும் தமிழ் தேச உணர்வாளர்களுக்கு அவசியம்.

மாவீரர்கள் சிந்திய குருதி எம்மண்ணிலிருந்து இன்னும் காயவில்லை. அவர்களின் எழுச்சி குரலும், தாகமும் இன்னும் அடங்கவில்லை.

முள்ளிவாய்க்கால் அவலக் குரலும் தினம் தினம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.நாம் ஏற்றிய தீபங்கள் எம் மனசாட்சியின் தீபங்களாக இருக்கட்டும். அது கூட்டு அரசியலில் சுடராக வியாபிக்கட்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் கருத்து : சாணக்கியனுக்கு அரச தரப்பு பதிலடி

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் கருத்து : சாணக்கியனுக்கு அரச தரப்பு பதிலடி

மாவீரர் தின நிகழ்வு தொடர்பாக இனவாத கருத்துக்கள் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கடும் எச்சரிக்கை

மாவீரர் தின நிகழ்வு தொடர்பாக இனவாத கருத்துக்கள் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கடும் எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, நீர்கொழும்பு

16 Apr, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Wimbledon, United Kingdom, Barnet, United Kingdom

09 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மல்லாவி, விசுவமடு, பிரான்ஸ், France

15 Apr, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

11 Apr, 2025
மரண அறிவித்தல்