முட்டை விற்பனை குறித்து வெளியான தகவல்
முட்டைகளை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வெளியிடுவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் செயற்பட்டு வருவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தவிசாளர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தற்போது முட்டை ஒன்றின் சில்லறை விலை 35 முதல் 36 ரூபாய் வரை விற்பனையாவதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாட்டின் தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்ப முட்டையின் விலை தீர்மானிக்கப்படுவதால், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் தேவை அதிகரிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உற்பத்தி செலவு அதிகரிப்பு
அதற்கேற்ப, முட்டை விலையை 45 ரூபாய்க்கு கீழ் சில்லறை விலையில் தக்கவைக்க எதிர்பார்ப்பதாகவும் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அரிசி மற்றும் சோளத்தின் விலை உயர்வினால் முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |