பாதிப்புக்குள்ளாகும் மதச்சுதந்திரம் : அறிமுகப்படுத்தப்படவுள்ள விசேட விசாரணை பிரிவு
இலங்கையில் மதச்சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக தனி பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.
சமூக வலையத்தளங்கள்
சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் மதக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை பெறுவதற்கு தனிப் பிரிவை நிறுவுமாறு, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு பதில் காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், குறித்த நடவடிக்கை தொடர்பான அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கியுள்ளதாக நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மதங்களை இழிவுபடுத்துவது தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் 0112 300 637 என்ற இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 0112 381 045 என்ற தொலைநகல் எண் ஊடாகவும் ccid.religious@police.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் மக்கள் தங்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |