வடக்கில் இராணுவ தரப்புக்கு சாதகமாக மாறிய தமிழர்களின் நடவடிக்கை

Sri Lanka Army Sri Lankan Tamils Jaffna TNA
By Vanan Aug 17, 2023 04:49 PM GMT
Report

வடக்கிலுள்ள இராணுவத்தை அகற்றுமாறு தமிழ் அரசியல்வாதிகளே கோருகின்றனரே தவிர, தமிழ் மக்கள் அல்லவென கடும்போக்குவாத சிங்கள பேரினவாத கட்சியான பிவித்துறூ ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

பருத்தித்துறை கற்கோளம் பகுதியில் இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் இராணுவ அகற்றம்

வடக்கில் இராணுவ தரப்புக்கு சாதகமாக மாறிய தமிழர்களின் நடவடிக்கை | Removal Of Army Camps In The North Push Tamil Mps

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் வடக்கில் இராணுவத்தை அகற்றுவது தொடர்பிலும் அதிபர் கருத்து வெளியிட்டார்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போது, 26 ஆயிரத்து 812 ஏக்கர் காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் படிப்படியாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் படிப்படியாக அத்தியாவசியற்ற காணிகளை விடுவிக்கப்பட்டதன் பிரதிபலமான, 22 ஆயிரத்து 919 மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இராணுவத்தினர் யுத்தத்தின் போது பாவித்த நிலங்களில் 85 வீதமானவை மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இராணுவ முகாம்களை நடத்திச் செல்லப் போதுமான அத்தியாவசியமான இடங்களை மாத்திரமே இராணுவத்தினர் வைத்துள்ளனர்.

எனினும் தற்போதைய அதிபரின் நிர்ப்பந்தத்தினால், மேலும் 377 ஏக்கர் காணிகள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மக்களிடம் கையளிக்க இராணுவம் இணங்கியுள்ளது. இதனால், இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட நிலத்தின் அளவு 87 வீதமாக உயர்வடையும்.

தற்போது 13 வீதமான நிலப் பகுதிகளிலேயே இந்த இராணுவ முகாம்கள் உள்ளன.

 இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் - யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

வலுக்கட்டாயப்படுத்தும் கூட்டமைப்பினர்

வடக்கில் இராணுவ தரப்புக்கு சாதகமாக மாறிய தமிழர்களின் நடவடிக்கை | Removal Of Army Camps In The North Push Tamil Mps

எனினும் அதிபர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளின் மனதை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு இந்த இராணுவ முகாம்களை மேலும் அகற்றுமாறு வலுக்கட்டாயப்படுத்துகின்றார்.

ஆகவே மேலும் விடுவிக்கப்படக் கூடிய இடங்களை அடையாளம் காணுமாறு மேஜர் ஜெனரல் தலைமையில் ஜுலை மாதம் 5 ஆம் திகதி செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஜுலை மாதம் 22 ஆம் திகதி இது தொடர்பான அறிக்கையை வழங்க வேண்டும் என அவர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது. 14 நாட்களுக்கும் குறைவான நாட்களே இந்தக் காணிகளை அடையாளப்படுத்துவதற்கு இராணுவத்திற்கு உள்ளது.

வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பாக இராணுவத்திற்கு கடுமையான நெருக்கடிகளை அதிபர் கொடுத்துள்ளார்” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025