வடக்கு ஆளுநரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்
Jaffna
Jeevan Thiyagaraja
Northern Province of Sri Lanka
By Vanan
வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ் தேசியக் கட்சியின் பிரசார செயலாளர் ஜெனார்த்தனன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஜெனார்த்தனன் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ். மாநகர சபையை கலைப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை அவர் எடுத்துவருகிறார்.
இவ்வாறு தமிழ் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவராக இருந்தால் அவரை பதவியில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
வடமாகாண ஆளுநரை அவரது பதவியிலிருந்து அகற்றுவதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்