அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரின் பணிகள் தொடர்பில் அவதானம்
நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரின் பணிகள் மற்றும் அது குறித்த பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களை அந்தப் பணிகளில் இருந்து நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்படி விடயம் தொடர்பில், ஆராயப்பட்டுள்ளது.
மாற்றுவழிமுறைகள்
இவ்விடயம் குறித்து அதிபர் ஊடக பிரிவு மேலும் அறியத்தருகையில்,

“இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கும், அதன்போது செயல்படுவதற்கும் குற்றங்களைத் தடுப்பதற்கும் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அந்த பணிகளிலிருந்து விசேட அதிரடிப் படையினரை நீக்கி, அந்த பணிகளை முன்னெடுப்பதற்கான மாற்றுவழி தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேலைத்திட்டம்
அத்துடன், குறித்த பணிகளைப் பொறுப்புடன், உரிய வகையில் முன்னெடுப்பதற்கும், இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முகாமைத்துவம் செய்யக்கூடியதுமான சரியான வேலைத்திட்டம் ஒன்றை பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் விரைவில் உருவாக்குமாறு சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 8 மணி நேரம் முன்