வடக்கு ஆளுநர் உருவாக்கிய சட்டம் இரத்து – ரணில் அதிரடி நடவடிக்கை
வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டங்கள் என்ற பெயரில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா தம்பாட்டில் வர்த்தமானி மூலம் அறிவித்த விடயங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவைப் பணித்தார் என்று அறியமுடிகின்றது.
அரசமைப்புக்கும் சட்டங்களுக்கும் முரணாக தனிநபர் ஒருவர் நியதி சட்டங்களை ஆக்கி அறிவிக்கும் விதத்தில் வடக்கு ஆளுநரால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.
இந்த விடயம் கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவால் சுட்டிக்காட்டப்பட்ட போது, அந்த வர்த்தமானி அறிவித்தலை நீக்கும் நடவடிக்கையை நீதி அமைச்சர் மூலம் மேற்கொள்ளலாம் என்று அதிபர் தெரிவித்திருந்தார்
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா
