கொட்டாஞ்சேனை தமிழர் படுகொலை: காவல்துறைக்கு பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு
கொட்டாஞ்சேனையில் (Kotahena) சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் மரணம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala), பிரதி காவல்துறை மா அதிபருடன் அறிக்கை கோரியுள்ளார்.
பதில் காவல் துறை மா அதிபரிடம் குறித்த அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
கடந்த 22 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் கொட்டாஞ்சேனை தெருவில் உள்ள ஒரு கடையில் 38 வயதுடைய ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு, அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றனர்.
அத்தோடு, துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களும் அதே நாளில் ரி-56 துப்பாக்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
உயிரிழப்பு
அதனை தொடர்ந்து, அன்று இரவு, மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதம் பற்றிய தகவல் கிடைத்ததை அடுத்து, அதிகாரிகள் சந்தேக நபர்களை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதன்போது, சந்தேக நபர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றதால், காவல்துறையினர் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
