அரிசி மற்றும் நெல் இருப்பு குறித்து அநுரவிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை
அரிசி மற்றும் நெல் இருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆவணத்தை இன்று (07) வர்த்தக அமைச்சின் செயலாளர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக இலங்கை சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து அரிசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
அரிசி வியாபாரிகளுடன் கலந்துரையாடல்
இந்த நிலைமையை கருத்திற்கொண்ட ஜனாதிபதி, பாரிய அரிசி வியாபாரிகளை அழைத்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
அத்துடன் தற்போது சில்லறை சந்தையில் பேணப்பட்டு வரும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அவ்வாறே பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் அரிசி இருப்புக்கள் தொடர்பில் விசேட கணக்கெடுப்பை மேற்கொள்ள நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனடிப்படையில், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் அம்பாறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இது தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |