மட்டக்களப்பு விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் - கமக்கார அமைப்பின் தலைவர் விசனம்!
Batticaloa
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Eastern Province
By Dharu
ஒழுங்கற்ற பரிந்துரைகள் மூலம் அடிக்கட்டு பசளை வழங்கப்படுமாயின் அது 5000 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் என மட்டக்களப்பு கமக்கார அமைப்பின் தலைவர் ரமேஷ் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“சுதந்திரத்திற்கு பின் புறக்கணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு விவசாயிகள் இம்முறையும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
ஆரோக்கியமான பயிற்செய்கை

ஏனைய மாவட்டங்களுக்கு 25kg ஆகா சிபாரிசு செய்யப்பட்ட அடிக்கட்டு பசளை, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 15kg ஆகா சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ஆரோக்கியமான பயிற்செய்கைக்கு இந்த அடிக்கட்டு பசளை முக முக்கியம்வாய்ந்த ஒன்று." என தெரிவித்தார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி