ரஷ்ய இராணுவத்தில் இணைய வேண்டாம்: பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை
ரஷ்ய இராணுவத்தில் சேரவேண்டாமென முப்படையைச் சேர்ந்த அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் இந்நாட்டு பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் இணைவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சிற்கு எந்த தொடர்பும் இல்லையென அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவம்
ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவர் அண்மையில் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் வெளியிட்ட தகவல் தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டது.
எனினும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தூதரகங்கள் ஊடாக நாட்டுக்கு அறிவிக்கப்படவில்லையென பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினரை ரஷ்யாவிற்கு அனுப்புவதற்கு இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் உடன்பாடு ஏற்படாத பின்னணியில் இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |