திருகோணமலையில் மகிந்த குடும்பம் பதுங்கியதாக வெளியாகிய தகவல்! ஒன்று திரண்ட மக்கள்
திருகோணமலை கடற்படை முகாமிற்கு மகிந்த ராஜபக்சவின் குடும்பம் வருகை தந்துள்ளதாக வெளிவந்த தகவலையடுத்து மக்கள் கடற்படை முகாமை முற்றுகையிட்டுள்ளனர்.
நேற்று கொழும்பில் இடம் பெற்ற பாரிய கலவரத்தை தொடர்ந்து மகிந்த குடும்பம் உலங்குவானூர்தியில் திருகோணமலைக்கு தப்பி சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் காணொளிகள் வெளியாகி வருகின்றன.
இதன் எதிரொலியாகவே இன்று திருகோணமலை மக்களால் குறித்த கடற்படை முகாம் முற்றுகையிடப்படுள்ளது.
தென்னிலங்கையில் நேற்று இடம் பெற்ற கலவரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல அரச ஆதரவாளர்களின் வீடுகள் எரியூட்டப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து பல முக்கிய உறுப்பினர்கள் அலரி மாளிகையில் பதுங்கி இருப்பதாக வெளிவந்த தகவலையடுத்து ஆர்ப்பாட்டகாரர் அலரி மாளிகையை முற்றுகையிட்டனர்.
ஆர்ப்பாட்டகாரர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் வானை நோக்கி துப்பாக்கி சூடு மேற்கொண்டனர்.
அத்தோடு தென்னிலங்கையின் பல பகுதிகளில் கலவரங்கள் உண்டாகியதோடு மகிந்தவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே பாதுகாப்பு அச்சம் கருதி வெளிநாடு தப்பிச்செல்வதற்காக மகிந்த குடும்பம் திருகோணமலை கடற்படை முகாமிற்கு வருகை தந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கபடுகின்றது