வடகிழக்கு ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை : கொழும்பில் நடந்த போராட்டம்
வடகிழக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் அடக்குமுறைகளுக்கெதிராக சிறப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பிலுள்ள (Colombo) நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இன்று (22) குறித்த போராட்டம் நடைபெற்றது.
ஊடகவியலாளர்கள் மீது நடைபெறும் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தி, ஊடக சுதந்திரத்தைக் காக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் இடம்பெற்றது.
அடக்குமுறைச் சம்பவங்கள்
போராட்டத்தில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், அரசின் அடக்குமுறைகள் ஜனநாயகத்திற்கும், ஊடகச் சுதந்திரத்திற்கும் நேரடியான அச்சுறுத்தலாக இருப்பதை வலியுறுத்தினர்.
அத்துடன் குறித்த போராட்டத்தின் போது குறிப்பாக ஊடகவியலாளர் குமணன் தொடர்பாக இடம்பெறும் அடக்குமுறைச் சம்பவங்கள் தீவிரமாக எடுத்துரைக்கப்பட்டன.
அவர் எதிர்கொண்டுள்ள மிரட்டல்கள், கண்காணிப்புகள், மற்றும் சுதந்திரமாக செயற்படுவதற்கு உருவாக்கப்படும் தடைகள் குறித்து போராட்டக்காரர்கள் கவலை வெளியிட்டனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், “வடகிழக்கில் ஊடகவியலாளர்களின் குரலை அடக்க அரசாங்கம் மற்றும் இராணுவம் முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்” என வலியுறுத்தினர்.
அத்துடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் போராட்டக்காரர்களுடன் இணைந்து ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
