வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிங்களம் பேசும் வயோதிபர் - உதவி கோரும் வைத்தியர்கள்(படங்கள்)
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு உளநல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி கோரியுள்ளார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட குறித்த வயோதிபர் சிங்கள மொழி பேசுபவர் என்பதுடன் தன்னை குணபால மென்டிஸ் என அறிமுகப்படுத்தியுள்ளார்.
எனினும் இவர் தொடர்பில் எவ்வித மேலதிக தகவலும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழைப்பு இலக்கம்
தற்போது வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல சிகிச்சைகள் பிரிவின் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த வயோதிபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல பிரிவுடனோ அல்லது வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி சி. சுதாகரன் தொலைபேசி இலக்கம் 0714323585, உளநல பிரிவு 0242227784, 12 ஆவது விடுதி இலக்கம் 0242222762, 0242222262 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
