பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குமாறு கோரிக்கை

Batticaloa
By Jaso Nov 22, 2025 12:08 PM GMT
Report

குரங்குகளிடம் இருந்து மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு காற்றழுத்த துப்பாக்கி(Air Gun)வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம்(20/11/2025) நடைபெற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபையின் ஆறாவது அமர்வில் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனால் குரங்குகளிடம் இருந்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பது மற்றும் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணையை முன் வைத்து சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் போது பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அவர் தொடர்ந்து பேசுகையில்,


அதிகரித்துள்ள குரங்குகளின் அட்டகாசம்

இலங்கை முழுவதும் இன்று குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் நடைபெற்றன ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குமாறு கோரிக்கை | Request Provide Firearms Pradeshiya Sabha Members

 எமது ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் தற்போது வரை குரங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே உள்ளது. நகர் பகுதிகளுக்குள் படையெடுக்கும் குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களை அழிக்கின்றன.

மின் குமிழ்களை திருடிச் செல்கின்றன, சி. சி. டிவி கமராக்களை உடைக்கின்றன, பிரதேச சபையினால் போடப்பட்ட மின் குமிழ்களை எடுத்துச் செல்கின்றன. தொலைத்தொடர்பு இணைப்புக்களை துண்டிக்கின்றன. பலன் தரும் மா, தென்னை மரங்களை அழிக்கின்றன. இதனால் பல ஆயிரக்கணக்கான சொத்தழிவுகள் ஏற்படுகிறது.

 அத்தோடு பல கிராமங்களில் பொதுமக்களை குரங்குகள் கடித்துள்ளன. குரங்கு கடியால் பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.இன் நிலையை கருத்தில் கொண்டு பொறுப்பு வாய்ந்த பிரதேச சபை என்ற வகையில் குரங்குகளிடம் இருந்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பது எமது கடமையாக உள்ளது.

தோற்கடிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டங்கள் : நெருக்கடியில் 30 உள்ளூராட்சி சபைகள்

தோற்கடிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டங்கள் : நெருக்கடியில் 30 உள்ளூராட்சி சபைகள்

காற்றழுத்த துப்பாக்கி

குரங்குகளை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும். என்னைப் பொறுத்தவரை காற்றழுத்த துப்பாக்கிகளை(Air Gun) வழங்கினால் அதன் மூலம் குரங்குகளை துரத்தியடிக்க முடியும்.

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குமாறு கோரிக்கை | Request Provide Firearms Pradeshiya Sabha Members

 குரங்குகளுக்கு காயமோ, உயிர் ஆபத்துக்களோ ஏற்படாத வகையில் அவற்றை துரத்தி அடிக்க முடியும். பிரதே சபை தவிசாளர் உரிய திணைக்களங்களோடு பேசி காற்றழுத்த துப்பாக்கிகளை (Air Gun) பெற்று குரங்குகளை துரத்தியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இல்லை என்றால் வட்டார உறுப்பினர்களுக்கு காற்றழுத்த துப்பாக்கிகளை (Air Gun) பெற்று தந்தால் அவர்களது கிராமங்களுக்கு வரும் குரங்குகளை அவர்கள் துரத்தியடிக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

கட்டாக்காலி நாய்களின் தொல்லை

இதேபோல் கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் அதிகரித்துள்ளன. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் வீதிகளில் சுற்றி திரிகின்றன. அதேபோல் கட்டாக் காலி நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. நகர் பகுதிகளில், சந்தைகளில் கூடுதலான நாய்கள் சுற்றி திரிகின்றன. பல நாய்கள் நோய் தாக்கத்தோடு சுற்றி திரிகின்றன.

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குமாறு கோரிக்கை | Request Provide Firearms Pradeshiya Sabha Members

 இதனால் வீதிகளில் விபத்துக்கள் ஏற்படுகிறது, விசர் நாய் கடி அதிகரிக்கிறது, சுகாதார பிரச்சினைகள், பாதுகாப்பு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 கட்டாக்காலிகளாக சுற்றி திரியும் நாய்களை பிடித்து நாய்கள் காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும். எதிர் காலத்தில் ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் சுற்றி திரியும் கட்டாக்காலி நாய்களை பராமரிக்க நாய்கள் காப்பகம் அமைக்க பிரதேச சபை ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அநுரவுக்கு முழு ஒத்துழைப்பு! நிலைப்பாட்டை அறிவித்த மனோ எம்.பி

அநுரவுக்கு முழு ஒத்துழைப்பு! நிலைப்பாட்டை அறிவித்த மனோ எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026