சர்வதேச விமான நிறுவனங்களிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை
SriLankan Airlines
Sri Lanka Economic Crisis
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
எரிபொருள் நிரப்புதல்
இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு போதுமான எரிபொருளை நிரப்பி கொண்டு வர வேண்டும் அல்லது வேறு விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்பட வேண்டும் என சர்வதேச விமான நிறுவனங்களிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் ரெஹான் வன்னியப்பா புளூம்பெர்க் நியூஸிடம் இதனைத் தெரிவித்தார்.
தற்போது விமான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நிலைமையை நிர்வகிப்பதற்காக இலங்கைக்கு வரும்போது போதுமான விமான எரிபொருளை எடுத்துச் வருமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று அவர் கூறினார்.
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்
இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸிற்கு எரிபொருள் நிரப்பும் பணி தற்போது தென்னிந்தியாவில் உள்ள சென்னை விமான நிலையம் மற்றும் துபாய் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புளூம்பெர்க் செய்திகள் தெரிவிக்கின்றன.
