வாகனங்கள் மீதான வரியை குறைக்க கோரிக்கை! அராசாங்கத்திற்கு தகவல்
மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் குழுவொன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் முன்மொழிவாக வாகன இறக்குமதியாளர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சாதாரண நபர் ஒருவர் வாகனம் வாங்கும் வாய்ப்பைப் பெறும் வகையில், இந்த வரிகளைக் குறைக்கவும் வாகன இறக்குமதியாளர்கள் கோரிக்கைகளை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகன விற்பனையில் வீழ்ச்சி
ஜனவரி 28 ஆம் திகதி அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய பின்னர், ஜனவரி முதல் ஓகஸ்ட் வரை 918 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் மாதத்தில் 249 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தற்போது வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
