யாழ்.கடற்பரப்பில் கடற்றொழிலாளரின் சடலம் மீட்பு: காவல்துறையினர் விசாரணை
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Laksi
யாழ்ப்பாணம் (Jaffna) - வேலணை கடற்கரையில் கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது சுருவில் கடற்கரையில் இன்று (5) கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
வேலனை துறையூர் பகுதியினை சேர்ந்த 46 வயதான கடற்றொழிலாளர் ஒருவரே கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் இவ்வாறு சடலமாக கரையொதுங்கியுள்ளார்.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, கடந்த (1)ஆம் திகதி யாழ்ப்பாணம்( Jaffna) – குருநகர் பகுதியில் இருந்து கடற்றொழிக்குச் சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் முரல் மீன் குத்தி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை ! 5 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி