வவுனியா நகரப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு!
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka Police Investigation
Death
By Pakirathan
வவுனியா நகரப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக சடலம் ஒன்று காணப்படுவதாக வவுனியா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காவல்துறையினர்
இதேவேளை, உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அந்த பகுதியில் இருக்கும் ஆதரவற்ற ஒருவராக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த மரணத்திற்கான காரணம் அறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி