சுற்றுலா வந்த ரஷ்ய பெண்ணுக்கு ஏற்படவிருந்த துயரம் - விரைந்து செயற்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள்
காலி - ஹிக்கடுவை நாரிகம கடற்பகுதியில் ரஷ்ய பெண் ஒருவரின் ஏழு வயது ஆண் குழந்தை அலையினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் ஜகத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்த ரஷ்ய பெண் தனது ஏழு வயது மகனுடன் நரிகம கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில் குழந்தை அலையில் அடித்துச்செல்லப்பட்டமையினால் தாய் உதவிக்காக சத்தமிட்டுள்ளார்.
குழந்தையை காப்பாற்றிய காவல்துறை உத்தியோகத்தர்கள்
இதன்போது கடற்கரையில் கடமையாற்றிய இரு உயிர்காக்கும் காவல்துறை உத்தியோகத்தர்கள் கடலில் அடித்துச்செல்லப்பட்ட குழந்தையை காப்பாற்றியதாக பிரதி காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
நரிகம காவல்துறை சுற்றுலாப் பிரிவிற்குட்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் கருணாரத்ன 81212 மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஹுலங்கமுவ 87306 ஆகிய இருவருமே குழந்தையை காப்பாற்றியவர்களாவர்.
தனது குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதற்காக இந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் ரஷ்ய பெண்,அருகில் இருந்தவர்கள் பாராட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
